வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (09:57 IST)

கோல் மழை பொழிந்த ஸ்பெயின் வீரர்கள்: 7 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

spain
கோல் மழை பொழிந்த ஸ்பெயின் வீரர்கள்: 7 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டி ஒன்றில் ஸ்பெயின் அணி கோஸ்டாரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயின் பக்கம் ஆட்டம் இருந்த நிலையில் ஸ்பெயின் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து தோல்களைப் போட்டு அசத்தினார்கள். ஸ்பெயின் கோல்களை தடுக்க முடியாத கோஸ்டாரிகா அணியினர் கடைசிவரை ஒரு கோல் கூட போட வில்லை என்பதால் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அபாரமாக வெற்றி பெற்றது
 
 இதனை அடுத்து நடைபெற்ற ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று விட்டது. உலக கோப்பை சாம்பியன் பட்டங்களை பெற்ற ஜெர்மனியை ஜப்பான் அணி வீழ்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து மொராக்கோ மற்றும் குரோஷியா ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva