வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (08:08 IST)

மெஸ்ஸிக்கு சவால் விட்ட ரோனால்டோ! அணியிலிருந்து விலகியதால் அதிர்ச்சி!

Ronaldo
போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான ரொனால்டோ க்ளப் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக போட்டிகளை கண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும். இவர்களுடைய போர்ச்சுகல், அர்ஜெண்டினா அணிகள் தனித்தனி க்ரூப் ஆட்டங்களில் ஆடி வருகின்றன.

இந்நிலையில் இருநாட்டு அணிகளும் ரவுண்ட் ஆப் 16ல் எதிர்கொள்ள நேர்ந்தால் மெஸ்ஸியை முறியடிக்க விரும்புவதாக சமீபத்தில் ரொனால்டோ கூறியிருந்தார். இதற்கிடையே தற்போது ரொனால்டோ தான் க்ளப் ஆட்டங்களில் ஆடி வந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மான்செஸ்டர் யுனிடெட் அணி மேலாளருக்கும், ரொனால்டோவுக்கும் முரண்பாடுகள் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் ரொனால்டோவின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit By Prasanth.K