1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (08:51 IST)

உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் எவை எவை?

Football world cup
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன
 
ஏற்கனவே உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு அணிகள் வெற்றி பெற்றன என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று நடைபெற்ற மற்றும் போர்ச்சுகல் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் மொரோக்கோ வெற்றி பெற்றது. அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அரையிறுதியில் அர்ஜென்டினா மற்றும் குரோசியா ஆகிய அணிகளும் பிரான்ஸ்-மொரோக்கோ  ஆகிய அணிகளும் மோத உள்ளன என்பதும் டிசம்பர் 18ஆம் தேதி உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்யும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva