திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (17:20 IST)

FIFA உலகக் கோப்பை : அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

arjentina- Croatia
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டம் நடந்து வந்த நிலையில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை  தொடர் நடந்து வரும் நிலையில், தற்போது, காலிறுதிச் சுற்று நடந்து வருகிறது.

நேற்றைய காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா-  நெதர்லாந்து அணிகள் மோதின.

35 வது நிமிடத்தில்.மெஸ்ஸி அழகான பாஸ் கொடுக்க மொலினா அதை கோலாக மாற்றினார்.

அடுத்து, 70 வது  நிமிடத்தில், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி இரண்டாவது கோல் அடித்தார்.

பதிலடியாக நெதர்லாந்து அணியினரும் 2 கோல்கள் அடித்தனர்.

எனவே,கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி சூப்பர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Edited By Sinoj