உலக அளவிலான செஸ் போட்டியில் தங்கம் வென்ற சென்னை சிறுவன்!

pragyananda
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (11:46 IST)
உலக அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டியில் சென்னை சேர்ந்த சிறுவன் பிரக்யானந்தா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த 10வது சுற்று போட்டியில் லிதுவேனியாவை சேர்ந்த பாவ்லிஸ் பல்டினிவியசை வெண்ரு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சென்னையை சேர்ந்த சிறுவன் பிரக்யானந்தா!

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்மேனிய வீரர் ஷந்த் சர்க்ஸ்யானை 8.5 புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார் ப்ரக்யானந்தா. இதுபற்றி உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் அதிகாரப்பூர்வ வலைதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ப்ரக்யானந்தாவுக்கு ’இந்தியா உன்னால் பெருமை அடைகிறது’ என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்த சென்னை சிறுவனை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.இதில் மேலும் படிக்கவும் :