1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohli scored 400 plus runs in 11 IPL seasons

தி ரியல் GOAT… 11 சீசன்களில் 400 ரன்கள்… யாரும் தொட முடியாத கிங் கோலியின் சாதனை!

IPL
நேற்று நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது.  நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. நேற்றைய போட்டியில் கே எல் ராகுல் 41 ரன்கள், ஸ்டாப்ஸ் 34 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியின் புவனேஷ் குமார் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெடுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் விராட் கோலி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதன் பின், கடைசி நேரத்தில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 73 ரன்கள் அடித்த நிலையில், 18.3 ஓவர்களில் பெங்களூர் அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. க்ருணால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் 400 ரன்களைக் கடந்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தார். விராட் கோலி இதுவரை 11 சீசன்களில் 400க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரருக்கும் இல்லாத பெருமை இதுவாகும்.
அடுத்த கட்டுரையில்
இது என் க்ரவுண்ட்… கே எல் ராகுலை ஜாலியாகக் கலாய்த்த விராட் கோலி!