திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2022 (09:20 IST)

வெள்ளி நாயகன் நீரஜ் சோப்ரா!! 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.


அமெரிக்காவின் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய தடகள அணி இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில், 88.13 மீட்டர் தூரம் எரிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற நீரஜ் உலக தடகளத்தில் வெள்ளி வென்றுள்ளார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது இந்தியா. 2003 ஆம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்ற பிறகு 19 ஆண்டுகளாக இந்தியா பதக்கம் பெறாமல் இருந்தது என்பது கூடுதல் தகவல்.