செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (08:50 IST)

முதன்முறையாக இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா! - உலக தடகள சாம்பியன்ஷிப்!

அமெரிக்காவில் நடந்து வரும் உலகதடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய தடகள அணி இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா தனது முதல் முறையிலேயே 88.39 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.
 
இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதி சுற்றிற்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். அதேபோல இந்திய வீரர்களான அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோரும் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.