மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி.. அட்டவணையை அறிவித்த பிசிசிஐ..!
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக பிப்ரவரி 14ஆம் தேதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை நான்கு நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பரோடா, பெங்களூரு, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்படும் என்றும், முதல் போட்டி பரோடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முதல் போட்டி நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பரோடா மற்றும் லக்னோ ஆகிய இரண்டு நகரங்களில், முதல் முறையாக மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் நடத்தப்பட இருப்பதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெங்களூரு மற்றும் புது டெல்லி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இறுதி போட்டி மும்பையில் வரும் மார்ச் 15ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.மகளிர் கிரிக்கெட் போட்டியின் முழு அட்டவணை குறித்த தகவல்கள் இதோ.
Edited by Mahendran