23 வருடங்களுக்கு பின் இந்திய அணி வாஷ் அவுட்: இதற்கு முன் எப்போது தெரியுமா?

23 வருடங்களுக்கு பின் இந்திய அணி வாஷ் அவுட்
Last Modified புதன், 12 பிப்ரவரி 2020 (08:30 IST)
23 வருடங்களுக்கு பின் இந்திய அணி வாஷ் அவுட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பதும் இந்த தொடரில் நியூசிலாந்து அணி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்திய அணி 23 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் அதற்கு முன்னர் கடந்த 1983-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 0-5 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனது என்பதும் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 1989 ஆம் ஆண்டு விளையாடிய இந்திய அணி 0-5 என்ற கணக்கில் தொடரை இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே 3 முறை இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியிருந்தாலும் கடந்த 23 ஆண்டுகளாக எந்த தொடரிலும் ஒயிட்வாஷ் ஆகாத நிலையில் நியூசிலாந்தில் தற்போது மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :