1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (18:49 IST)

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்ப்... என்ன காரணம் ?

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் டிரம்ப்
சமீபத்தில் இரான் நாட்டுடன் அமெரிக்கா நடத்துகொண்ட விவகாரத்தில் உலக நாடுகள் மொத்தமும் பதற்றத்தில் இருந்தன. இந்நிலையில் அந்த நிலை மாறியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் இறுதியில் வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
 
இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்  தனது மெலனியா டிரம்ப்  உடன் இந்த மாதம் 24 ஆம் தேதி இந்தியாவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்க உள்ளனர்.
 
கடந்த முறை அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, டிரம்பை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு டிரம்ப் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
 
முன்னாள்  அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வரும் அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காகவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.