வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (10:22 IST)

நடராஜன் டி 20 உலகக்கோப்பையில் இடம்பெற இது ஒன்றுதான் வழி!

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறுவதற்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதுதான் ஒரே வழி என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மூலமாக புகழ் வெளிச்சம் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன், இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக தொடரில் இருந்து விலகினார். அதையடுத்து அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தெரிகிறது. இந்நிலையில் நடராஜன் உலகக்கோப்பை டி 20 தொடரில் விளையாடுவது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக வீசவேண்டும். ஐபிஎல் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினால்தான் உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைக்கும்’ எனக் கூறியுள்ளார்.