மேரி கோம்மிற்கு ஆறாவது தங்கம் கிடைக்குமா....?

mary kom
Last Modified புதன், 14 நவம்பர் 2018 (13:25 IST)
உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் நாளை டில்லியில் துவங்க இருக்கிறது. இதில் பங்கேற்கவுள்ள மேரிகோம் ஆறாவது தங்கம் வெல்வாரா என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
நாளை டில்லியில் துவங்கும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் வரும் 24 ஆம் தேதிவரை வருகிறது.
 
10 நாட்களுக்கு  மேல் நடைபெறும் இப்போட்டியில் 70 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
 
இந்தியா சார்பில் மேரிகோம், பிங்கி ராணி, சிம்ரஞித்,சோனியா, சரிதா தேவி, உள்ளிட்ட 120 பேர் பங்கேற்கின்றனர்.
 
மேரி கோம் ஏற்கனவே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :