1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:52 IST)

குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேரி கோம்..

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதி ஆட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவாவை எதிர்கொண்ட இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனை மேரிக்கோம், அவரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

 
இவர் எற்கனவே இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார், மேலும் இவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அர்ஜுனா ஆகிய விருதுகள் வழங்கபட்டுள்ளது.  35 வயதான மேரி கோம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடையில்லை என நிருபித்துள்ளார்,
 
இந்நிலையில் இவரின் தங்க பதக்க பட்டியலில் மேலும் ஒரு தங்க பதக்கம் இந்தியாவிற்காக சேர்ந்துள்ளது.