செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (09:08 IST)

இம்ரான் கான், சித்து, ரணதுங்கா, அசார் வரிசையில் அரசியலில் குதிக்கும் கிரிக்கெட் வீரர்?

வங்கதேசத கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் மஷ்ரஃபே மொர்ட்டஸா அந்நாட்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசிய நாடுகளில் கிரிக்கெட்டும் சினிமாவும் மக்களின் இரு கண்கள் போன்றவை.  ஆசிய நாடுகளில் கிரிக்கெட்டிலும் சினிமாவிலும் புகழ் பெறுபவர்கள் அடுத்தகட்டமாக அரசியலை நோக்கி செல்வது அணிச்சை செயலாக உள்ளது.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர்களும் முக்கியமான அரசியல் பதவிகளில் இருந்து வருகின்றனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானின் அதிபராக இருக்கும் இம்ரான் கான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் தற்போது வங்கதேச கேப்டன் மொர்ட்டசா தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளராக அவரது சொந்த தொகுதியான நரேலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதை  அவாமி லீக் கட்சியை சேர்ந்த சிலரும் உறுதி செய்துள்ள நிலையில் மொர்ட்டஸாவிடம் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.