திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (08:28 IST)

குத்துச்சண்டையில் தங்கம் வென்று சாதனை படைத்த மேரி கோம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டைப் போட்டியில் மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. குத்துச் சண்டையில் மகளிருக்கான 45-48 கிலோ எடைப்பிரிவிற்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம், இலங்கையின் அனுஷா தில்ருக்‌ஷீயை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற மேரிகோம் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார். 
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர்கொண்ட மேரிகோம் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்துள்ளார். 

இதனையடுத்து இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கம் என 43 பதக்கங்கள் வென்று பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது