ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய மே.இ.தீவுகள்: 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Last Modified சனி, 9 நவம்பர் 2019 (22:22 IST)
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருவது தெரிந்ததே. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அந்த அணி ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானத்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 47 ரன்கள் அசத்தல் வெற்றி பெற்றது

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்த போட்டி நவம்பர் 11ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள்:
பூரன்: 67
லீவிஸ்: 54
ஹோப்: 43
ஹெட்மயர்:34

ஆப்கானிஸ்தான்:

நஜிபுல்லா ஜாட்ரான்: 56
ரஹ்மத் ஷா: 33
முகமது நபி: 32
ஹஜ்ரதுல்லா: 23இதில் மேலும் படிக்கவும் :