டி20 போட்டியிலும் மே.இ.தீவுகள் வெற்றி! தொடரும் ஆப்கனின் பரிதாபம்

Last Modified வியாழன், 14 நவம்பர் 2019 (22:44 IST)
இந்தியாவில் உள்ள லக்னோ மைதானத்தில் மே.இ.தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியிலும் அந்த அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து முதலில் மே.இ.தீவுகள் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 165 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
ஸ்கோர் விபரம்:

மே.இ.தீவுகள் அணி: 164/5 20 ஓவர்கள்

லீவீஸ்: 68
பொல்லார்டு: 32
ஹெட்மயர்: 21
ராம்தின்: 20

ஆப்கானிஸ்தான்: 134/9
20 ஓவர்கள்
நஜ்புலா ஜாட்ரான்: 27
அஸ்கர் ஆப்கான்: 25
ஹஜ்ரத்துல்லாஹ்: 23


ஆட்டநாயகன்: லீவீஸ்


இதில் மேலும் படிக்கவும் :