அரசியலில் கால் பதித்து முதல்வராகிறாரா ’தல’ தோனி ?
கடந்த 2011 -ல் நடைபெற்ற உலக கோப்பை சச்சினின் இறுதி உலகக்கோப்பை. இந்த உலக கோப்பையை நாங்கள் சச்சினுக்காக வெல்வோம் என களமிறங்கினார் தோனி. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தனது வேகத்தை காட்டினார் தோனி. 274 ரன்கள் பெற்றிருந்த இலங்கையை 48வது ஓவரில் ஒரே சிக்ஸர் அடித்து வீழ்த்தினார். 23 வருடங்களுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை வென்றது. அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்.
இத்தனை பெருமைகளைப் பெற்ற தோனி எதிரணியினராலே கூட கூல் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது, இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணியில் தோனி சிறப்பாக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதில், அவர்கள் இருவருக்குப் பின்னால், அமைச்சர் ப்யூஸ் கோயல் இருப்பது போல ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து சமூகவலைதளங்களில், சில நெட்டிசன்கள் குழப்பமாக பதிவுகளை இட்டனர்.அதில், கிரிக்கெட் வீரர் தோனி , பாஜகவில் இணைந்துவிட்டார் என்றும், அவர் ஜார்கண்ட் மாநிலத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் எனவும் பொய்யான தகவல்களைப் பரப்பினர்.
இந்த பொய்யான செய்திகளை உண்மையென நம்பி தோனி ரசிகர்களும் இதை பார்வர்டு செய்தனர். இதனால் அரசியல் விமர்சகர்கள், விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தோனி தரப்பில், அந்த படத்துடன் சமூக வலைதளங்களில் பரவலாகும் தகவல்கள் பொய்யாகப் பரப்பப்பட்டவை என்பது தெரியவந்ததுள்ளது.