பிறந்த நாளில் மகள் ஸிவாவுடன் ஆட்டம் போட்ட தல தோனி

Last Updated: ஞாயிறு, 7 ஜூலை 2019 (18:17 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தல தோனி இன்று தனது பிறந்த நாளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக வீர்ர்கள் மத்தியில் கொண்டாடினார்.
ஸ்பெஷலாக செய்யப்பட்ட கேக்கை வெட்டிய தோனி, மகளுக்கும் மனைவிக்கும் கேக்கை ஊட்டிவிட்டார். பின்னர் சக வீரர்களுக்கும் அவர் கேக்கை கொடுத்தார். விராத்கோஹ்லி, ஹர்திக் பாண்டியா உள்பட வீரர்கள் தோனிக்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி கேக்கை ஊட்டிவிட்டனர்.

இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகளுடன் தோனி வித்தியாசமான நடனம் ஒன்றை ஆடினார். எம்பி எம்பி குதித்து மகளுடன் அவர் ஆடிய நடனத்தை பார்த்து அனைவரும் கைதட்டி ரசித்தனர். மேலும் ஹர்திக் பாண்டியாவுடன் அவர் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிப்பது போன்ற நடனத்தையும் ஆடினார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில் இந்திய வீரர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை முதல் தோனி பிறந்த நாள் ஹேஷ்டேக்குகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :