1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (16:46 IST)

கோலியை கட்டுப்படுத்த தோனியை ஆலோசகராக நியமிக்கவில்லை… பிசிசிஐ அதிகாரி பேச்சு!

நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஒரு சேர ஆதரவையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. ஏனென்றால் கோலி அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதனால் தோனி நியமிக்கப்பட்டது அவரின் திறமையைக் கேள்விக்குள்படுத்துவது போல ஆகும். அதே நேரம் ஒரு சிலரோ தோனி போன்ற ஒரு ஆள் இருந்தால்தான் கோலியை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் ‘தோனி ஒரு சிறந்த தலைவர். அவர் தலைமையில் நாம் பல கோப்பைகளை வென்றுள்ளோம். இளம் வீரர்கள் அவர் மேல் மரியாதை வைத்துள்ளார்கள். அவரை அணியில் கொண்டுவந்தது யாருக்கும் செக் வைக்க இல்லை. கோலி கேப்டன் பதவியை விட்டு விலகுவது முற்றிலும் அவரது தனிப்பட்ட முடிவு. அவரை ஏன் நாங்கள் அழுத்தம் கொடுக்க போகிறோம்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.