வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (18:12 IST)

ஆஸ்திரேலிய மண்ணில் கோலி என்ன செய்தார் தெரியுமா...?

இந்திட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மிகத் திறமையானவர் என்று எல்லோராலும் பாராட்டப்படுகிறார். தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற மூன்றாவது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது கோலி 1138 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் புது சாதனையை படைத்தார். அதாவது, ஒரே ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் 1138 ரன்கள் அடித்த முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்த போது இந்தியா டிக்ளேர் செய்தது. இந்தியா அணியில் அகர்வால் 76 ரன்களும், புஜாரா 106 ரன்களும் எடுத்தனர். புஜாரா டெஸ்ட் போட்டியில் தன் 17 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
 
இன்றைய 2 ஆம் நாள் ஆட்டத்தின் போது,இந்திய அணி கேப்டன் விராட் கோலி 82 ரன்களுக்கு அவுட்டானார். ஆனால் அவர் புது சாதனை படைத்தார்.

வெளிநாடுகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்திர டிராவிட்டின் சாதனையை கோலி முறியடித்தார். இந்த சாதனையை நிகழ்த்திய கோலிக்கு  சம் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.