1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 டிசம்பர் 2018 (13:06 IST)

வலுவான ஸ்கோரில் இந்தியா டிக்ளேர் – மீண்டும் அசத்திய புஜாரா

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

நேற்று மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களோடும் கோஹ்லி 47 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்று 2 ஆம் நாளை ஆடிய இந்திய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடியது. புஜாரா சிறப்பாக விளையாடி தனது 17 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறக்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கோஹ்லி மற்றும் புஜாராவை ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆவுட் ஆக்கி வெளியேற்றினர்,

அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரஹானே ரோஹித் இணை ரன் குவிப்பில் ஈடுபட இந்தியாவின் ரன் வேகம் மெல்ல அதிகரித்தது. ரஹானே 34 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த பண்ட் 39 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேற, நிலைத்து நின்ற ரோஹித் அரைசதம் அடித்தார். ஜடேஜா 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். இந்திய அணி  7 விக்க்ட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கோஹ்லி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ரோஹித் ஷர்மா 63 ரன்களில் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸி தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களும் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை சேர்த்துள்ளது.