திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (19:12 IST)

முதல் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பந்துவீச முடிவு!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து இன்னும் சற்றுநேரத்தில் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கவுள்ளது
 
இந்திய அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின், சஹா, குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கவுள்ளனர். மேலும் இந்திய அணியில் புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
 
மே.இ.தீவுகள் அணியில் பிரெத்வெயிட், காம்பெல், ஹோப், பிராவோ, ஹெட்மயர், சேஸ், கம்மின்ஸ், ஹோல்டர், புரூக்ஸ், ரோச் மற்றும் கேப்ரியல் ஆகியோர் ஆடும் 11 பேர் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது