புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:24 IST)

இளசுகளுக்கு கொக்கி போட நினைத்து; கம்பி எண்ணும் புரோக்கர்கள்!

விபச்சார புரோக்கர்கள் இருவரை இளைஞர் ஒருவர் போலீஸாரிடம் வசமாக சிக்க வைத்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 
 
பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் இருவரிடன் விபச்சார புரோக்கர்கள் இருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பக்கத்தில் உள்ள மசாஜ் செண்டரில் அழகிகள் இருவர் இருக்கிறார்கள் என அழைத்துள்ளனர். 
 
இதை கேட்டு அந்த இளைஞரும் அவர்களுடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளான். பின்னர் பணம் எடுத்துக்கொண்டு வருவதாக கூறிவிட்டு பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து சம்பவ இடத்திற்கு போலீஸார் அழைத்துக்கொண்டு வந்துள்ளான். 
 
போலீஸார் விரைந்து வந்து மேற்கொண்ட சோதனை மசாஜ் செண்டர் என பெயர் வைத்துவிட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வருவது தெரியவந்தது. 
 
பின்னர் அங்கிருந்த 2 பெண்களை மீட்டு, புரோக்கர்களை கைது செய்தனர். இந்த இருவரை தவிர்த்து இது போன்று தலைமறைவாகியுள்ள மேலும் 4 புரோக்கர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.