வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2023 (10:36 IST)

மெரீனாவில் பெரிய ஸ்க்ரீனில் உலக கோப்பை லைவ்.. இலவசமாக பார்க்கலாம்!

ICC Worldcup
இன்று நடைபெறும் உலக கோப்பை இறுதி போட்டியை சென்னை மெரீனா பீச் மற்றும் பெசண்ட் நகர் பீச்சில் லைவாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.



உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதிக் கொள்கின்றன. கடந்த 2003ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இதேபோல இறுதிவரை வந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி உலக கோப்பையை தவறவிட்டது.

இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த மோதலில் அதற்கு பதிலடி தரப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இறுதி போட்டிகளை காண மக்கள் தயாராகியுள்ள நிலையில் தமிழக அரசின் இளைஞர் நலவாழ்வு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சென்னையில் உள்ள மெரீனா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் பெரிய திரையில் உலக கோப்பை இறுதி போட்டியை லைவாக ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. இது முற்றிலும் இலவசம் என்றும் அனைத்து மக்களும் வந்து உலக கோப்பையை கண்டுகளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Worldcup


Edit by Prasanth.K