இயக்குனர் ஷங்கர் இன்னும் சம்பளம் தரவில்லை… திரைக்கதை எழுத்தாளர் ஆதங்கம்!
இயக்குனர் ஷங்கர் தனக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளதாக திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஆலோசகரான கருந்தேள் ராஜேஷ் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஆலோசகராக பணிபாற்றி வருபவர் கருந்தேள் ராஜேஷ். அதுமட்டுமில்லாமல் திரைக்கதை சார்ந்து வகுப்புகளும் எடுத்து வருகிறார். இவர் பங்களிப்பில் வெளியான சூதுகவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றி பெற்றதால், அவர் பக்கம் பெரிய இயக்குனர்களின் பார்வை விழுந்தது.
அப்படிதான் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி, மற்றும் அவரின் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு திரைக்கதையில் பணியாற்றினார் கருந்தேள் ராஜேஷ். இதில் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பல பிரச்சனைகளால் கைவிடப்பட்டது. அதே போல இந்தியன் 2 படமும் பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு நிற்கிறது.
இந்நிலையில் கருந்தேள் ராஜேஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ஷங்கர் தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக மறைமுகமாக ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் சென்தேள் சிறுகதை. சம்பளம். சினிமாவில் சம்பள பாக்கி வைத்திருக்கும் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஜெய்பீம் போன்ற படங்கள் வரும்போது. விளம்பரம். எல்லாமே நியூஸ்பேப்பரில் பெயர் வருகிறது என்பது மட்டுமே. நடன ஆசாமி.
பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் பங்கர் உட்பட சம்பள பாக்கி.
விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த உழைப்பாளர் உட்பட எல்லோருமே சம்பள பாக்கி கொடுக்காமல் ஜாலியாக இன்டர்வ்யூ கொடுக்கின்றனர். மொதல்ல வேலை செஞ்ச ஆளுங்களுக்குப் பணம் கொடுங்கய்யா. முடியலையா? போண்டி என ஒத்துக்கொள்க. அதென்ன வெறும் விளம்பரம்? எனக் கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.