நான்தான் விராட் கோலி! – வார்னர் மகளின் வைரல் வீடியோ!

kohli and co
Prasanth Karthick| Last Modified திங்கள், 11 நவம்பர் 2019 (09:51 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னரின் மகள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வார்னர். இவருக்கு கேண்டிஸ் என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். அவர்களில் மூன்றரை வயதான இரண்டாவது மகள் இண்டி ரே கிரிக்கெட் விளையாடி இருக்கிறாள். வார்னர் பந்துவீச ஓவொரு முறையும் பந்தை அடித்துவிட்டு “நான்தான் விராட் கோலி” என்று சொல்லியிருக்கிறாள்.

இண்டி ரே விளையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கேண்டிஸ் ”எனது இளைய மகள் இந்தியாவில் அதிக நாட்களை கழித்திருக்கிறாள். அதனால்தானோ என்னவோ விராட் கோலி ஆக விரும்புகிறாள்” என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :