செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (19:39 IST)

”ரிஷாப் பாண்ட்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள்”..

”ரிஷாப் பாண்ட்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள்”..
ரிஷாப் பாண்ட்டின் ஒவ்வொறு செயலையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர், ரிஷப் பாண்ட் சரியாக செயல்படவில்லை என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.
”ரிஷாப் பாண்ட்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள்”..

இந்நிலையில் இது குறித்து பேசிய டி20 போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மா, ”ரிஷாப் பாண்ட்டை விமர்சிக்காமல் தனியாக விடுங்கள், அவர் ஒரு நல்ல வீரர். இளம் வீரரும் கூட. அவர் தற்போது சர்வதேச அளவில் பல விஷயங்களை கற்று வருகிறார். இந்த சமயத்தில் அவர் செய்யும் ஒவ்வொறு செயலையும் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று” என கூறியுள்ளார்.

மேலும் ரிஷாப் பாண்டை அவருடைய ஸ்டைலில் விளையாட விடுங்கள். அவரை நீங்கள் உன்னிப்பாக கவனித்து கருத்து கூறுவதை நிறுத்தினால் அவர் சிறப்பாக விளையாடுவார்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.