2 பேட்ஸ்மேன்கள் சதம்: நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

Last Modified ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (19:28 IST)
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஹாமில்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணிக்கு, இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்து வருகிறது

ஹாமில்டன் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி 375 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாதம் 105ரன்களும், மிட்செல் 73 ரன்களும் எடுத்தனர்
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தற்போது விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான பர்ன்ஸ் 101 ரன்கள் எடுத்து எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார்.
இதனை அடுத்தே கேப்டன் ரூட் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இன்னும் களத்தில் குதிக்கிறார்

இந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் இதுவரை எடுத்து உள்ளது இந்த போட்டி ஏற்கனவே மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் முதல் இன்னிங்ஸே முடிவடையவில்லை என்பதால் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :