பிரபல கிரிக்கெட் வீரருக்கு 5 வது பெண் குழந்தை...! ரசிகர்கள் வாழ்த்து

shahid afridi
sinoj kiyan| Last Modified செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:26 IST)
பிரபல கிரிக்கெட் வீரருக்கு 5 வது பெண் குழந்தை...! ரசிகர்கள் வாழ்த்து

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன், அப்ரிடி, எதிரணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் ரன்கள் அடித்து தெறிக்கவிட்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.அதில் முக்கியமாக ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 39 வயதான அப்ரிடிக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவருக்கு 5 வது பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :