செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (10:52 IST)

அடடே இது சூப்பர்... தரவரிசையில் ராகுல் டாப்; கோலி டவுன்!!!

டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார் கே.எல்.ராகுல். 
 
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில் டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. 
 
டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா அதே 11 வது இடத்தில் நீடிக்க, கே.எல் ராகுல் 2-வது இடத்தில் உள்ளார். 
 
கடந்த சில டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என தனது பன்முகத்திறமையை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.