’விராட்கோலி ’அண்ணா உங்க மனசு யாருக்குத்தான் வரும் ...?

criket
Last Updated: வெள்ளி, 2 நவம்பர் 2018 (20:18 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காகவே ரன்கள் அடிப்பதாக விராட்கோலி மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த  மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிவாகை சூடியது.
இதில் ஒட்டுமொத்த இந்திய அணிவீரர்களின் பங்கு இருந்தாலும் கூட அணியை ஒருங்கிணைத்து வெற்றிப்பாதைக்கு வித்திட்ட கேப்டன் விராட்டினை யாரும் புகழாமல் இருக்க முடியாது.
 
நடந்து முடிந்த 5 ஒருநாள் போட்டிகளிலும் 453 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது பெற்றிருக்கிறார். இதுதவிர சாதனை நாயகன் சச்சினின் சாதைனையை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
 
இது பற்றி கோலி கூறும் போது, அணியின் வீரர்களின் சிறப்பான செயல்பாடுதான் இவ்வெற்றிக்குக் காரணம். பந்து வீச்சு,பேட்டிங் போன்ற அணைத்து துறைகளிலும் நன்றாக திறமையாக செயல்பட்டோம். இந்த பெருமையெல்லாம் அணியினரையே சாரும்.என்று கூறியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :