என்ன கொடுமை இது ... 'தாதா’ தம்பிக்கு சிப்பந்திகளான போலீஸ்...?

ikbal
Last Updated: சனி, 27 அக்டோபர் 2018 (19:21 IST)
இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படுபவர் ,கடந்த 1993 ஆம் ஆண்டில் மும்பை தொடர்குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக இந்திய போலீஸாரல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடப்பட்டு வருபவர் நிழலுலக தாதா தாவுத் இப்ராகிம். இதுவரை இவரைப்பிடிக்க முடியவில்லை.உலகில் எங்கேயோ ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார் என நினைத்தாலும் உளவுத்துறையும் அவ்வப்போது சில தகவல்களை இந்திய அரசுக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியிலும் கூட தவூத்திம் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் போட்டியைக் காண வர வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தனர்.
 
இந்நிலையில் மாஹாராஸ்டிர மாநிலத்தில் ஆள்கடத்தல் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள இக்பால் உடல்நலக்குறைவினால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார்.
 
அதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக சென்ற காவல்துறையினரே இக்பாலுக்கு சில சலிகைகள் அளித்ததாகவும் பணியில் அலட்சியமாக இருந்து குற்றவாளிக்கு உதவிகரமாக இருந்ததற்கான பீடியோ காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில் இக்பாலுடன் இருந்த 5 காவல்துறையினர் நீக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :