புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (15:36 IST)

டிசம்பரில் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் : ரஜினியின் அண்ணன் பேட்டி

டிசம்பர் மாதத்தில் கட்சி குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிடுவார் என நடிகர் ரஜினியில் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

நாமக்கலில் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறுகையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஜினி கட்சி தூங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றார். பாஜக அவரை இயக்கவில்லை என்றும் தெரிவித்தார் மேலும் சபரிமலை குறித்த கேள்விக்கு நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ரஜினி காந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12ல் கட்சி குறித்து அறிவிப்பு இருக்காது என ரஜினி கூறிய நிலையில் அவரது அண்ணன் சத்திய நாராயணராவ், கட்சி குறித்த  அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.