கொரோனா இரண்டாவது அலை… ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நானி திரைப்படம்!

Last Modified வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:41 IST)

நானி நடித்துள்ள டக் ஜெகதீஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நானி, ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. நின்னுகோரி மற்றும் மஜிலி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு நானி – இயக்குனர் சிவா நிர்வானா கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :