ஸ்மித், கோலி – டெஸ்ட் தரவரிசையில் யார் கெத்து ?

Last Modified புதன், 25 டிசம்பர் 2019 (10:05 IST)
டெஸ்ட் தரவரிசையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்து இந்திய அணியின் கேப்டன் கோலி நிறைவு செய்துள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நேற்று துபாயில் வெளியிட்டது. அதில் 928 புள்ளிகள் பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்மித் 917 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
இந்த ஆண்டு தொடக்கம் முதலே டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி. ஆனால் ஓராண்டுக்கு பின் அணிக்கு திரும்பிய ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றினார்.  அதன் பின்னர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவருக்கும் இடையில் முதல் இடத்தைப் பிடிப்பது யார் என்பதில் கடுமையான போட்டி நிலவியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் கேப்டன் கோலி. தற்போது இந்த ஆண்டுக்கான இறுதிப் பட்டியலில் முதல் இடத்தோடு அவர் நிறைவு செய்யவுள்ளார்.

 இதில் மேலும் படிக்கவும் :