ஸ்மித் கரையான் போல வேலை செய்கிறார் – இயான் சேப்பல் காட்டமான விமர்சனம் !

Last Modified புதன், 11 டிசம்பர் 2019 (12:58 IST)
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பெய்னுக்கு எதிராகக் கரையான் போல வேலை செய்கிறார் என இயான் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸி அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் ஆஸி அணியின் கேப்டன் டிம் பெய்ன் இருக்கும்போதே முன்னாள் கேப்டன் ஸ்மித் சில கள வியூகங்களை வகுத்தார். இது குறித்து விமர்சனம் செய்த இயன் சேப்பல் ஸ்மித் டிம் பெய்னுக்கு எதிராக ஒயிட் ஆண்டிங், (கரையான் போல அரிப்பது போன்ற பொருள்தரும் சொல்) செய்கிறார் எனக் கூறினார்.

சேப்பலின் இந்த விமர்சனம் சர்ச்சையானதை அடுத்து ஆஸியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ‘ சேப்பலின் வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கின்றன. எந்தவொரு கேப்டனும் முன்னாள் கேப்ட்ன்கள் மற்றும் மூத்த வீரர்களிடம் அறிவுரை கேட்பது இயல்புதான். அனைத்து வீரர்களும் களத்தில் தலைமைத் துவத்தோடு செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்’எனப் பதிலளுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :