1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India vs England first odi match today at Nagpur

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டெஸ்ட் தொடரில் தோல்விகளைப் பெற்று வந்த இந்திய அணிக்கு இது உத்வேகம் அளிக்கும் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் மதியம் 1 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த மைதானத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான ஃபார்மில் இல்லாத இந்திய மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மீண்டும் தங்கள் இயல்பான ஆட்டத்துக்குத் திரும்ப இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
எதிர்காலத் திட்டம் என்ன?... பத்திரிக்கையாளரின் கேள்வியால் கடுப்பான ரோஹித் ஷர்மா!