1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. TNPL 2025

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

Ashwin

டிஎன்பிஎல் போட்டிகளில் நேற்றைய போட்டியில் LBW ஆன அஸ்வின், பெண் அம்பயரிடம் கெஞ்சி விட்டு கோபத்தோடு வெளியேறும் வீடியோ வைரலாகியுள்ளது.

 

நேற்றைய டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும், ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் 93 ரன்களில் ஆல் அவுட் ஆன திண்டுக்கல் அணியை 11.5 ஓவர்களில் 94 ரன்களை அடித்து வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ்.

 

இந்த போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது ஓப்பனிங் இறங்கியிருந்த அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், 11 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 18 ரன்களை சேர்த்திருந்தார். அப்போது சாய் கிஷோர் வீசிய பந்தில் LBW அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதும் பெண் அம்பயர் கிருத்திகாவிடம் அது அவுட் இல்லை என முறையிட்டார். ‘மேடம்.. மேடம்’ என்று அழைத்தார்.

 

ஆனால் பெண் அம்பயர் கிருத்திகா தனது முடிவில் உறுதியாக இருந்ததாலும் திண்டுக்கல் ட்ராகன்ஸுக்கு ரிவ்யூ இல்லாததாலும் அஸ்வின் வெளியேற வேண்டி வந்தது. இதனால் கோபமடைந்த அஸ்வின் பேட்டை ஓங்கி வீசிக் கொண்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்