வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:05 IST)

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வரும் நிலையில் முதல் மூன்று டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனை அடுத்து நேற்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கியது
 
நேற்றைய முதல் போட்டி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ்ட் கெயில் 4 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் போல்ட் ஆகி அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய ஹோப் நிதானமாக விளையாடினாலும் லிவீஸ் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர் 36 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 13 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மீண்டும் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில மணிநேரங்கள் மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்து போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதனை அடுத்து இந்த போட்டி இரு நாடுகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி ரத்தானது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது