வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:40 IST)

ஆட்டநாயகன் விருதை மனைவிக்கு அர்ப்பணித்த விராட் கோஹ்லி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அதை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணித்தார்.

 
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகள் இந்திய அணி தோல்வி அடைந்தது.
 
குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தங்களது பலத்தை நிரூபித்துள்ளது.
 
இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி  ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆட்ட நாயகன் விருதை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்தார்.