வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (07:23 IST)

நடக்க முடியாத நிலையில் வினோத் காம்ப்ளி.. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடக்கவே முடியாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி என்பதும் அவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தற்போது 52 வயதில் இருக்கும் வினோத்  காம்ப்ளி   , கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வினோத் காம்ப்ளி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பைக் ஒன்றை கையால் பிடித்தபடியே இருக்கும் காட்சியும், அவரால் நடக்கவே முடியாமல் தடுமாறும் காட்சியும் உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து அந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக இருந்த வினோத் காம்ப்ளியா இப்படி? 52 வயதிலேயே நடக்க முடியாமல் உள்ளாரா? என்று இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வேதனையுடன் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Siva