வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (08:34 IST)

டிஎன்பிஎல்: ஃபைனலில் கோட்டை விட்ட கோவை அணி.. திண்டுக்கல் சாம்பியன்..!

கடந்த சில வாரங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் அணி ஆரம்பம் முதல் அபாரமாக விளையாடி வந்தது என்பதும், ஏழு லீக் போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அனைத்து பேட்ஸ் பேட்ஸ்மேன்களும் நேற்று சொதப்பினர்.

இதனை அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான விமல் மற்றும் சிவம் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஆனால் அதே நேரத்தில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி 52 ரன்கள் எடுத்த நிலையில் 18.2 ஓவர்களில் திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனால் 2024 ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை திண்டுக்கல் அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் ஷாருக்கான் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva