ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (16:29 IST)

"2026-லயும் நீ பிச்சை தான் எடுக்க போற.. என்னோட சாபத்தை வாங்கிக்காத"..! சீமானை விளாசிய விஜயலட்சுமி.!

Vijayalakshmi Seeman
என்னையும் திமுகவையும் பற்றி தப்பா பேசுவது ஏன் என்றும் 2026-லயும் நீ பிச்சை தான் எடுக்க போற என்றும் சீமான் பற்றி கெட்ட வார்த்தைகளால் விஜயலட்சுமி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் தான் கர்ப்பம் ஆகியதாகவும் ஆனால் இது வெளியே தெரியக்கூடாது என கரு சிதைவு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். தொடர்ந்து சீமானுக்கு எதிராக அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
இந்த நிலையில் சமீபகாலமாக அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமி, தன்னை பற்றி சீமான் பேசியது தொடர்பாக மோசமான வார்த்தையால் விமர்சித்து மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எதற்காக என்னையும் திமுகவையும் இணைத்து பேசுறீங்க, திமுக, கலைஞர் மற்றும் என்னையே தவறாக பேசுவதை விட அரசியலில் வேறு எதுவும் உங்களுக்கு தெரியாதா.?
 
என்னைய பற்றி பேசாதே என சொல்லியும் நீ என்னைய பற்றி எதற்காக பேசுகிறார். நான் அமைதியாக பெங்களூரில் இருக்கேன். என்னை பற்றியும் திமுகவை பற்றியும் தொடர்ந்து தவறாக பேசினால் 2026ஆம் ஆண்டும் தேர்தலில் தோல்வி தான் கிடைக்கும். இதோட நிப்பாட்டிக்கோ, கடைசியாக சொல்கிறேன்.

இதற்கு மேலும் என்னை பற்றி பேசினால் என்ன செய்வேன் என உனக்கு தெரியும் என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி விஜயலட்சுமி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மீண்டும் சீமானுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.   

 
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான்,   நடிகை விஜயலட்சுமியை தனக்கு எதிராக தூண்டிவிட்டது திமுக என கூறியிருந்தார்.  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.