திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 மே 2019 (15:15 IST)

விஜய் சங்கர் காயம் – உலகக்கோப்பையில் விளையாடுவாரா ?

உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் விஜய் சங்கர் நேற்றையப் பயிற்சியின் போது காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அம்பாத்தி ராயுடுவுக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘விஜய் சங்கர் ஒரு 3டி பிளெயர். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்’ எனக் கூறினார். முன்னணி வீரர்கள் பலர் விஜய் சங்கரின் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்தார்கள்.

இப்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றைய பயிற்சியின் போது விஜய் சங்கர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் அவர் பாதியிலேயே பயிற்சியில் இருந்து வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

ஒருவேளை விஜய் சங்கர் உலககோப்பைத் தொடரில் இருந்து விலகினால் அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் அல்லது அம்பாத்தி ராயுடு ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம்.