1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 மே 2019 (11:18 IST)

ஐசிசி உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு பரிசா? விவரம் உள்ளே

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் வரும் 30-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வெற்றி பெறபோகும் அணிகளுக்கான பரிசு விவரங்களை இண்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 
அதன் விவரங்கள்:
 
1.  சாம்பியன் பட்டம் வெல்லும் அணி - ரூ.28 கோடி.
2.  இரண்டாவது இடம் பெறும் அணி - ரூ.14 கோடி.
3.  அரையிறுதி வரை வரும் இரண்டு அணிகள் - தலா ரூ.5.61 கோடி.
4.  லீக் பிரிவில் (45 ஆட்டங்களில்) வெல்லும் அணிகள் - தலா ரூ.28 லட்சம்.
5.  லீக் பிரிவை தாண்டிய அணிகள் - தலா ரூ.70லட்சம் வழங்கப்படுகிறது.
 
இந்த ஆட்டத்தின் இறுதி போட்டி ஜூலை 14 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த  போட்டியில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, வெஸ்ட்  இண்டிஸ், இலங்கை உள்பட 10 நாட்டின் அணிகள் கலந்து கொள்ள உள்ளன.