வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:56 IST)

தோனி இந்தியாவை ஆளவேண்டும் – நயன்தாரா காதலரின் சர்ச்சை டிவீட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றது குறித்து பிரபலங்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

தோனி இந்த ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லை என்று பலரும் தோனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனின் தோனி பற்றிய டிவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது டிவீட்டில் ‘என் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்று தோனியை சந்திப்பது. மிகவும் சந்தோஷமான மற்றும் திருப்திகரமான தருணம். இதை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி. ஒரு நாள் இவர் இந்தியாவை வழிநடத்துவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தோனியை அரசியலுக்கு இழுக்கும் வகையில் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் விக்னேஷ் சிவனின் இந்த டிவீட் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது,.