மகளிர் டி20 தொடர்: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற மிதாலிராஜ் அணி:
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற மிதாலிராஜ் அணி:
ஒருபக்கம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று மகளிர் டி20 போட்டி தொடங்கியது. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் சூப்பர்நோவா அணியும் வெலாசிட்டி மோதின. இந்த போட்டியில் வெலாசிட்டி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை அடுத்து சூப்பர்நோவா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது
ஜெயங்கனி 44 ரன்களும் கேப்டன் கவுர் 31 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 127 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெலாசிட்டி அணி 19.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சனே லூயஸ் 37 ரன்களும் வெர்மா 34 ரன்களும் வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சனே லூயஸ் இந்த போட்டியின் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் கடைசி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெலாசிட்டி அணி வெற்றி பெற்றது பார்வையாளர்களுக்கு திரில்லாக இருந்தது