1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (11:27 IST)

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… முக்கிய வீரருக்கு மீண்டும் வாய்ப்பு!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் இந்த ஆண்டு ஆஸியில் நடக்க உள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் நிலையில் 2021 ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரை வென்ற உத்வேகத்தோடு ஆஸி அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.

டிசம்பர் 8 முதல் இந்த தொடருக்கான ஆஸி அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடமளிக்கப்படாத உஸ்மான் கவாஜா இப்போது அணியில் இணைக்கப்பட்டுள்ளார். டிம் பெய்ன் தலைமையில் ஆஸி அணி இந்த ஆஷஸ் தொடரை எதிர்கொள்கிறது.

ஆஸி அணி விவரம்

டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ட்ராவிஸ் ஹெட், பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மைக்கேல் நீசர், ஜை ரிச்சர்ட்சன்

போட்டி விவரம்
 
  • டிச.8-12 பிரிஸ்பன் முதல் டெஸ்ட்
  • டிசம்பர் 16-20 அடிலெய்ட் ஓவல், 2வது டெஸ்ட்.
  • டிசம்பர் 26-30 மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்-3வது டெஸ்ட்
  • ஜனவரி 5-9, சிட்னில் 5வது டெஸ்ட்.
  • ஜனவரி 14-18, பெர்த், 5வது டெஸ்ட்